பெருங்கிருமிகள் (சூப்பர்பக்ஸ்)
  
Translated

எதிர்நுண்கிருமிகள்/எதிர்ப்பிகள் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருப் பிரிவிலும் பல வித மருந்துகள் இருக்கின்றன. தற்போது, பெரும்பாலான எதிர்நுண்கிருமிகளை எதிர்க்கும் கிருமிகளைப் பெருங்கிருமிகள் என்று அழைக்கிறோம்.

 

"பெருங்கிருமிகளின் அச்சுறுத்தலால் மனித மருத்துவத்தில் அதிகப்படியான எதிர்நுண்கிருமிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது."

 

"பெருங்கிருமிகளால் வரும் பிணிகளிலிருந்து உங்களைக் காப்பாற்றிகொள்ள, உங்கள் கைகளை அடிக்கடி கழுவவும்.”

 

“பெருங்கிருமிகள் மிகவும் வழக்கமான மருத்துவ நடைமுறைகளைக்கூட மிக சிக்கலானதாக மாற்றக்கூடும்.”

 

“நாம் இப்பொழுதே செயல்படவில்லை என்றால், காலநிலை மாற்றங்கள் ஏற்படுவதற்கு முன்பாகவே நம்மில் அனேகரைப் பெருங்கிருமிகள் கொன்றுவிடும்.”

 

Learning point

பெருங்கிருமிகளின் எழுச்சி

மாசுபடுத்தும் கிருமிகளை விவரிக்க 1970 க்குப் பிறகு பிரபலமான பத்திரிகைகளில் ‘பெருங்கிருமிகள்/சூப்பர்பக்’ என்ற சொல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.[3] தற்பொழுது, பெருங்கிருமி/சூப்பர்பக் என்ற சொல் பல வகையான எதிர்நுண்கிருமிகளை எதிர்க்கும் ஆற்றலைப்பெற்ற கிருமிகளைக் குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது.  பெருங்கிருமிகளால் வரும் பிணிகளுக்கு சிகிச்சையளிப்பது கடினம்

 

ஊடகங்கள், பொதுமக்களின் பார்வையையும் அணுகுமுறைகளையும் பிரதிபலிக்க முடியும்.[4] குறிப்பாக, 1996ஆம் ஆண்டு இங்கிலாந்தில், “எந்தரோகொக்கஸ் (Enterococcus) நுண்ணுயிர்களின் வான்கோமைசின் (vancomycin) எதிர்ப்பாற்றலைப் பெற்ற பெருங்கிருமி/சூப்பர்பக்ஸ்” என்ற ஒரு நிகழ்ச்சியை பிபிசி பனோரமா, தொலைக்காட்சி படைத்தது. இந்த நிகழ்ச்சி “சூப்பர்பக்ஸ்” பெருங்கிருமியின் தாக்கத்தை அணுக்கமாகக் கண்காணிக்க வழிவகுத்துள்ளது.

 

தற்போது, பெருங்கிருமிகளினால் ஏற்படும் சிக்கல்களை எவ்வாறு எதிர்ப்பது என்பதை மக்கள் அறிந்துகொள்வது மிக அத்தியாவசியமானதாகும்.

 

ஆதார நூற்பட்டியல்

[1]          நுகி, பி., & குல்லண்ட், ஏ. (2018, மே 22). பெருங்கிருமிகள்: ஆண்டிபயாடிக் எதிர்ப்பை நாம் சமாளிக்காவிட்டால் மில்லியன் கணக்கானவர்கள் இறந்து விடுவார்கள். வலைத்தளத்திலுருந்து மீட்டெடுக்கப்பட்டது

 Nuki, P., & Gulland, A. (2018, May 22). Superbugs: Millions will die if we don't tackle antibiotic resistance. Retrieved from

https://www.telegraph.co.uk/news/2018/05/22/superbugs-could-render-even-routine-procedures-deadly-warns/

[2]        ஆம்ஸ்ட்ராங், எஸ். (2017, நவம்பர் 04). நாங்கள் இப்போது செயல்படவில்லை என்றால், காலநிலை மாற்றம் ஏற்படுவதற்கு முன்பாகவே பெருங்கிருமிகள் நம்மைக் கொன்றுவிடும். வலைத்தளத்திலுருந்து மீட்டெடுக்கப்பட்டது

Armstrong, S. (2017, November 04). If we don't act now, superbugs will kill us before climate change does. Retrieved from https://www.wired.co.uk/article/antibiotic-resistance-innovation-dame-sally-davies-nhs

[3]        மோஷர், டி. (2012, டிசம்பர் 29). பெருங்கிருமிகள் என்றால் என்ன? வலைத்தளத்திலுருந்து மீட்டெடுக்கப்பட்டது

Mosher, D. (2012, December 29). What is a Superbug? Retrieved from https://www.livescience.com/32370-what-is-a-superbug.html

[4]        ரெனால்ட்ஸ், எல். ஏ, & டான்சி, ஈ. எம். (2008). பெருங்கிருமிகள் மற்றும் பெரும்மருந்துகள்: எம்.ஆர்.எஸ்.ஏவின் வரலாறு (தொகுதி 32, இருபதாம் நூற்றாண்டு மருத்துவத்திற்கு வெல்கம் சாட்சி). யு.சி.எல் மருத்துவ வரலாற்றிற்கான வெல்கம் டிரஸ்ட் மையம்

Reynolds, L. A., & Tansey, E. M. (2008). Superbugs and Superdrugs: A History of MRSA (Vol. 32, Wellcome Witness to Twentieth Century Medicine). Wellcome Trust Centre for the History of Medicine at UCL. ISBN 978 085484 114 1

Related words.
Word of the month
New word